Trump On Operation Sindoor | டிரம்ப் சொன்ன ஒரு வார்த்தை - உலகே குழப்பத்தில்
இந்தியா, பாகிஸ்தான் இடையிலான ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின் போது 8 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே இந்தியா, பாகிஸ்தான் போரை தாம் தலையிட்டு நிறுத்தியதாக தம்பட்டம் அடித்த டிரம்ப், தற்போது இந்தப் போரில் 8 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறியிருப்பது முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. இதற்கு முன் 7 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக டிரம்ப் கூறியிருந்தார். இந்நிலையில், அமெரிக்காவின் மியாமி நகரில் நடைபெற்ற வர்த்தக மாநாட்டில், 8 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக டிரம்ப் முன்னுக்குப் பின் முரணாக தெரிவித்துள்ளார். இருப்பினும், அவை எந்த நாட்டின் விமானங்கள் என்பதை டிரம்ப் குறிப்பிடவில்லை.
Next Story
