ஈரானின் அணு ஆயுதத்தை சீண்டிய `Operation Rising Lion’.. இஸ்ரேலுக்கு ஈரான் பதிலடி
இஸ்ரேல் தாக்குதல் - ஈரான் தளபதிகள், விஞ்ஞானிகள் உள்பட 78 பேர் பலி
இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி இருப்பதால் மத்தியக் கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது. ஈரானின் அணு ஆயுத உட்கட்டமைப்பைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. ஈரான் மீதான தாக்குதலை ஆபரேஷன் ரைஸிங் லயன் (Operation Rising Lion) என்றும் இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது. இந்த தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதிகள், அணுசக்தி விஞ்ஞானிகள் உள்பட 78 பேர் உயிரிழந்தனர். 320-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்நிலையில் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தியுள்ளது. முக்கிய நகரான ஜெருசலேம் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி இருக்கும் நிலையில், ஏவுகணைத் தாக்குதலில் இஸ்ரேலில் சில கட்டடங்கள் சேதம் அடைந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Next Story
