வகை வகையாய்.. ரக ரகமாய் வந்திறங்கிய சோலார் கார்கள்.. கண்ணை கவர்ந்த ரேஸ்
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் சோலார் கார் பந்தயம், பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது.
Bridgestone World Solar Challenge என அழைக்கப்படும் இந்த பந்தயத்தில், உலகம் முழுவதிலும் இருந்து பந்தய குழுக்கள் பங்கேற்றுள்ளன. மாணவர்கள் மற்றும் பொறியாளர்கள் அடங்கிய குழுவினர், சூரிய ஆற்றலை மட்டுமே பயன்படுத்தி இயங்கும் சோலார் கார்களை உருவாக்கியுள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் வடக்குப் பகுதியில் உள்ள டார்வின் நகரில் தொடங்கிய இந்தப் பந்தயம், சுமார் 3 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தை கடக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இறுதியாக தெற்கு ஆஸ்திரேலியாவின் அடிலெய்டில் சோலார் கார் பந்தயம் நிறைவடைகிறது.
Next Story
