ஹார்வர்ட் பல்கலை.,க்கு ஒபாமா பாராட்டு

x

அமெரிக்காவில் பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்திற்கு அனுமதிக்க கூடாது என அதிபர் டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டிருந்த நிலையில், அந்த உத்தரவினை உலக புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகம் நிராகரித்திருப்பதற்கு முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், கல்வி சுதந்திரத்தை நசுக்கும் சட்டவிரோதமான முயற்சியை நிராகரித்து ஹார்வர்ட் பல்கலைக்கழகம் மற்ற உயர்கல்வி நிறுவனங்களுக்கு முன்மாதிரியாக திகழ்வதாக தெரிவித்துள்ளார். மற்ற பல்கலைக்கழகங்களும் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தை பின் தொடருவார்கள் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்