இலங்கை அதிபருடன் அஜித் தோவால் சந்திப்பு

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் இலங்கை அதிபர் கோட்டபய்ய ராஜபக்சேவை சந்தித்து கலந்துரையாடினார்
இலங்கை அதிபருடன் அஜித் தோவால் சந்திப்பு
Published on

இலங்கைக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால், கொழும்பு நகரில், இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச, வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆகியோரை சந்தித்தார். இந்த ஆலோசனை கூட்டத்தில், இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ ரீதியான ஒத்துழைப்பு, சமுத்திர பாதுகாப்பு, இரு நாட்டு கடலோர பாதுகாப்பு போன்ற விஷயங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்தல் பற்றி விவாதிக்கப்பட்டது. அதேபோல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக இலங்கை பாதுகாப்பு படையினருக்கு ராணுவ தளவாடங்களை கொள்முதல் செய்வதற்கு 50 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியை இந்தியா வழங்க உள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com