துப்பாக்கிச் சூடு பயிற்சியை பார்வையிட்ட வடகொரிய அதிபர்
வடகொரியாவில், ராணுவ சிறப்புப் படையினரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு உட்பட பிரத்யேக பயிற்சிகளை, வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் நேரில் பார்வையிட்டார். மேலும், ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்களையும் அதிபர் கிம் சந்தித்தார். ரஷ்யாவிற்கு எதிரான ராணுவ தூண்டுதலில் அமெரிக்கா தொடர்ந்து ஈடுபட்டால், வட கொரியா ராணுவப் படையை பயன்படுத்துவதற்கு அங்கீகாரம் அளிக்கத் தயங்காது என்று பியாங்யாங்கில் உள்ள ரஷ்ய தூதரகத்திற்கு கடந்த வாரம் சென்றபோது அதிபர் கிம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Next Story
