மூஞ்சில் அடித்து சொன்ன வடகொரியா... டிரம்ப்பை கதறவிட்ட கிம் - பதறும்கொரிய தீபகற்பம்

x

மீண்டும் அணு ஆயுதப் பேச்சுவார்த்தை நடத்த வட கொரியா மறுத்துள்ளது... எதிர்காலத்தில் பேச்சுவார்த்தை நடந்தாலும், வட கொரியா தனது அணு ஆயுத கொள்கையைக் கைவிடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டில், டிரம்ப் மற்றும் கிம் சிங்கப்பூரில் சந்தித்து அணு ஆயுதம் அல்லாத கொரிய தீபகற்பத்தை நோக்கிச் செயல்பட ஒப்புக்கொண்டனர்.ஆனால் அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததன்... இந்நிலையில், கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோ ஜாங் இதுகுறித்து தெரிவித்தபோது, கடந்த காலங்களில் இரு நாடுகளின் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு யதார்த்தம் மாறிவிட்டது என்பதையும், எதிர்காலத்தில் எந்தப் பேச்சுவார்த்தையும் உதவாது என்பதையும் அமெரிக்கா ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்... அத்துடன் டிரம்ப் மற்றும் கிம் இடையே தனிப்பட்ட ரீதியாக எந்த பிரச்சினையும் இல்லை எனவும் விளக்கமளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்