Nobel Prize | Trump | "நோபல் பரிசு..இனிமே அது முக்கியமில்லை.." அடுத்த போர்..? டிரம்ப் சைலண்ட் மிரட்டல்
கிரீன்லாந்து தொடர்பாக நார்வே பிரதமருக்கு அவர் அனுப்பிய செய்தி குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு டிரம்ப் இவ்வாறு பதிலளித்தார்...
நார்வே பிரதமருக்கு அவர் அனுப்பிய செய்தியில், 8 போர்களை நிறுத்தியிருந்தாலும் நார்வே தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்காததால்,
தனது முடிவுகளில் அமைதிக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற கடமை இனி தனக்கு இல்லை என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இனி அமெரிக்காவிற்கு எது நன்மை பயக்குமோ அதன் மீதுதான் அதிகம் கவனம் செலுத்துவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
புளோரிடாவிலிருந்து வாஷிங்டன் டி.சிக்குத் திரும்பும் முன், செய்தியாளர்கள் இதுகுறித்து டிரம்ப்பிடம் கேள்வி கேட்டனர். அப்போது அமைதிக்கான நோபல் பரிசை விட மனித உயிர்களை காப்பதே தனக்கு முக்கியம் எனவும்
இந்தியா பாகிஸ்தான் போரையும் சேர்த்து 8 போர்களை இதுவரை நிறுத்தியுள்ளதாகவும், 9வது போரும் நிறுத்தப்பட வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்தார்.
