Trump | America | "சண்ட வேணாம் பாஸ்.." டிரம்ப் திடீர் மாற்றம்
Trump | America | "சண்ட வேணாம் பாஸ்.." டிரம்ப் திடீர் மாற்றம் #Trump #America #Colombia அமெரிக்காவின் வாஷிங்டனில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் நடந்த தனது முதல் சந்திப்பு நேர்மறையாக அமைந்ததாக கொலம்பியா அதிபர் கஸ்டாவோ பெட்ரோ (Gustavo Petro) தெரிவித்தார். சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பெட்ரோ, ரசியல் ரீதியான வேறுபாடுகள் இருந்தாலும் சுதந்திரம் என்ற ஒரே மதிப்பை அடிப்படையாகக் கொண்ட உரையாடலாக இது அமைந்ததாக கூறினார். வெள்ளை மாளிகையில் உள்ள ஆபிரகாம் லிங்கன் உருவப்படத்தை குறிப்பிட்டு, “வரலாறும் பண்பாடும் வேறுபட்டாலும், நம்மை இணைப்பது சுதந்திரமே என்று அவர் குறிப்பிட்டார்... பொருளாதார தடைகள் விதிப்பது பகுத்தறிவானது அல்ல என்று டிரம்ப் கூறியதாக பெட்ரோ தெரிவித்தார். இதைத் தானும் ஏற்றுக்கொள்வதாக கூறிய அவர், இது தடைகளின் பாதை அல்ல, சுதந்திரத்தின் பாதை என்றார். அத்துடன் டிரம்ப் தனக்கு சிவப்பு நிற “Make America Great” என்ற வாசகத்துடன் கூடிய தொப்பியை வழங்கியதாக பெட்ரோ தெரிவித்தார். அதில் ‘S’ எழுதி “Make the Americas Great” என்று தென்னமெரிக்க நாடான கொலம்பியாவையும் குறிக்கும் விதமாக மாற்றியதாகவும் கூறினார்
