Nigeria Attackers | கிராமத்திற்குள் புகுந்து 50 பேரை கொத்து கொத்தாக கொன்று குவித்த `நைஜிரிய’ கும்பல்

கிராமத்திற்குள் புகுந்து 50 பேரை கொத்து கொத்தாக கொன்று குவித்த `நைஜிரிய’ கும்பல்

நைஜிரியாவில் மர்ம கும்பல் தாக்குதலில் 50 பேர் கொலை நைஜீரியாவின் வடமேற்கு பகுதியில் உள்ள சாம்பாரா (Zamfara) மாநிலத்தில் ஆயுதம் தாங்கிய கும்பல் கிராமத்திற்குள் புகுந்து 50 பேரை கொன்று, பல பெண்கள் மற்றும் குழந்தைகளை கடத்திச் சென்றுள்ளது. துங்கன் டுட்ஸே (Tungan Dutse) கிராமத்திற்குள் நுழைந்த மர்ம கும்பல் பிடியில் இருந்து தப்பிச் செல்ல முயன்றவர்களை சுட்டுக் கொன்றதுடன், பல வீடுகளுக்கும் தீ வைத்துள்ளனர்... காணாமல் போனவர்களின் விவரங்களை அதிகாரிகள் கணக்கெடுத்து வருகின்றனர். தாக்குதலுக்கு முன், 150க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் ஆயுதம் ஏந்தியவர்கள் வருவதாக கிராம மக்கள் பாதுகாப்பு படையினருக்கு தகவல் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

X

Thanthi TV
www.thanthitv.com