நியூயார்க்கில் அவசர நிலை அறிவிப்பு - வெளியேற்றப்படும் அமெரிக்கர்கள்
அமெரிக்காவின் நியூயார்க்கில் காட்டுத்தீ பரவியதைத் தொடர்ந்து அவசர நிலை பிறப்பிக்கப்பட்டது. நியூயார்க்கின் வெஸ்ட்ஹாம்ப்டன் (WESTHAMPTON) பகுதியில் அடுத்தடுத்து 4 இடங்களில் காட்டுத்தீ பரவியது. வானில் கரும்புகை சூழ்ந்தது. நியூயார்க் கவர்னர் கேத்தி ஹோச்சுல் (Kathy Hochul) அவசர நிலையை பிறப்பித்தார். இந்நிலையில், காட்டுத்தீ பரவக்கூடிய ஆபத்து உள்ள பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வெளியேற்றப்பட்டனர்.
Next Story
