வனவிலங்கு பூங்காவில் புதிய வரவாக வெள்ளை சிங்கக் குட்டிகள்
வெனிசுலா நாட்டின் மரகே பகுதியில் உள்ள வனவிலங்கு பூங்காவில், புதிதாக இரண்டு வெள்ளை சிங்கக் குட்டிகள் பிறந்துள்ளன. இது தென்னாப்பிரிக்காவின் பாந்தெரா லியோ மெலனோசைட்டா வகையைச் சேர்ந்தது என கூறப்படுகிறது. இந்த வெள்ளை சிங்கக் குட்டிகளின் பெற்றோர்களான கமடகுவா மற்றும் செபாஸ்டியன், செக் குடியரசு வனவிலங்கு பூங்காவில் இருந்து கொண்டு வரப்பட்டது. இந்நிலையில், புதிதாக பிறந்துள்ள வெள்ளை சிங்கக் குட்டிகளை மருத்துவர்கள் உதவியுடன் பூங்கா நிர்வாகம் கவனித்து வருகிறது.
Next Story
