Nepal New Currency Note | நேபாள நாட்டின் புதிய ரூ.100 நோட்டில் இந்திய பகுதிகள்
நேபாள 100 ரூபாய் நோட்டில் இந்திய பகுதி வரைபடம்.புதிய 100 ரூபாய் நோட்டை வெளியிட்டுள்ள அண்டை நாடான நேபாளம், அதில் இந்திய பகுதிகளை உள்ளடக்கிய வரைபடத்தை வெளியிட்டு இருப்பது இந்தியாவின் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது. இந்திய நேபாள எல்லையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள லிபுலேக், லிம்பியாதுரா, கலாபானி ஆகிய பகுதிகளை நேபாளம் உரிமை கொண்டாடி வரும் நிலையில், அதனை இந்தியா நிராகரித்தது. இருப்பினும் அந்தப் பகுதிகளையும் உள்ளடக்கிய வரைப்படத்தை வெளியிட்டு இந்தியாவை சீண்டி வருகிறது.
Next Story
