நேபாள 'ஜென் Z' போராட்டம் - அதிகரித்த பலி எண்ணிக்கை

x

நேபாள 'ஜென் Z' போராட்டம் - அதிகரித்த பலி எண்ணிக்கை

நேபாளத்தில் 'ஜென் Z' தலைமுறையினர் நடத்திய போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் 25 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுவிட்ட நிலையில், எஞ்சியுள்ளவர்களின் உடல்களை அடையாளம் காணப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நேபாளத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்க்கியை இடைக்கால பிரதமர் பதவிக்கு போராட்டக்காரர்கள் ஒருமனதாக தேர்ந்தெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியதை அடுத்து, அவருடன் ராணுவ தலைமை தளபதி அசோக் ராஜ் சிக்டெல் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்