பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் மனைவி மரணம்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீபின் மனைவி குல்சும் நவாஸ் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் மனைவி மரணம்
Published on
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீபின் மனைவி குல்சும் நவாஸ் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். 68 வயதான குல்சும், இங்கிலாந்து தலைநகர் லண்டனில் வசித்து வந்த நிலையில், அங்குள்ள மருத்துவமனையில் இன்று காலமானார். சில வாரங்களுக்கு முன் லண்டனில் இருந்து பாகிஸ்தான் சென்ற நவாஸ் ஷெரீபும், அவரது மகள் மரியமும், ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு ராவல்பிண்டியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பாகிஸ்தான் சிறையில் கணவரும், மகளும் உள்ள நிலையில் லண்டனில் குல்சும் நவாஸ் உயிரிழந்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com