இன்னொரு முகத்தை காட்டிய இயற்கை.. உயிரை கையில் பிடித்து ஓடும் கிரீஸ் மக்கள்

x

காட்டுத்தீயால் எரியும் வீடுகள் - பொதுமக்கள் வெளியேற்றம்

கிரீஸ் நாட்டின் அட்டிகா நகரில் காட்டுத் தீயில் வீடுகள் பற்றி எரிவதால், பால்கனி வழியாக குதித்து பொதுமக்கள் தப்பித்தனர்.

கிரீஸ் நாட்டில் வெப்பநிலை அதிகாமாக உள்ளதால் ஏதென்ஸ் அருகே உள்ள கிரியோனெரி, அட்டிகா பகுதியில் காட்டுத்தீ எரிந்து வருகிறது. காட்டுத்தீ குடியிருப்பு பகுதிக்குள் பரவியதால் பால்கனி வழியாக தப்பித்த பொதுமக்களை கிரேன்கள் உதவியுடன் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். இதில் 5 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து அந்த பகுதியில் 40க்கும் அதிகமான தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஹெலிகாப்டர் உதவியுடன் காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் முயற்சிகள் நடந்து வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்