தென் கொரியாவில் பிரபல பாப் பாடகி மர்ம மரணம்

தென் கொரியாவை சேர்ந்த பிரபல பாப் பாடகி கூ ஹரா தலைநகர் சியோலில் உள்ள அவரது இல்லத்தில் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார்.
தென் கொரியாவில் பிரபல பாப் பாடகி மர்ம மரணம்
Published on

தென் கொரியாவை சேர்ந்த பிரபல பாப் பாடகி கூ ஹரா தலைநகர் சியோலில் உள்ள அவரது இல்லத்தில் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார். 28 வயதான கூ ஹராவுக்கு உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் மட்டும் கூ ஹராவை 15 லட்சம் ரசிகர்கள் பின் தொடர்ந்தனர். கூ ஹரா எப்படி இறந்தார் என்பது இதுவரை உறுதி செய்யப்படாத நிலையில், அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகம் வலுவாக இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். வீட்டில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள மறைந்த பாப்

பாடகி கூ ஹராவின் உருவப்படத்திற்கு ரசிகர்கள் மலர் அஞ்சலி செலுத்தினர்.

X

Thanthi TV
www.thanthitv.com