

மியான்மரில் கன மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பல ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். வெள்ளக்காடாக காட்சியளிக்கும் கிராமங்களில் கப்பல் மூலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.மேலும் அவர்களுக்கு உணவு பொருட்கள் மற்றும் மருத்துவ சேவை வழங்கப்படுகிறது.