லண்டனை கலக்கும் “மிஸ்டர் பபுள் மேன்“

லண்டனை கலக்கும் “மிஸ்டர் பபுள் மேன்“

லண்டன்ல ஓடக்கூடிய சிவப்பு நிற டபுள்-டெக்கர் பேருந்துகள் ரொம்ப ஃபேமஸ்..அந்த பேருந்துல ஓட்டுநரா இருக்கக்கூடிய ரிக்கி ரீட் இப்ப செம்ம வைரலாகிட்டு இருக்காரு...

குழந்தைகள் விளையாடக்கூடிய பபுள் கன்-அ நாம பாத்துருப்போம்... அந்த பபுள் கன்-அ வச்சுக்கிட்டு பேருந்துல பயணிகள் ஏறுறப்ப “எங்க ஸ்மைல் பண்ணுங்க“னு சொல்லிக்கிட்டே பபுள் ஊதி மகிழ்விப்பாராம்...சிடுசிடுனு ஏறுறவங்க கூட சிரிக்க ஆரம்பிச்சுருவாங்க!

டிரைவர் வேலைன்னா தினமும் திட்டுறது, திட்டு வாங்குறது...கோபப்படுறதுனு மட்டும் இல்லாம...இப்படி ரிலாக்சாவும் பணிய செய்யலாம்னு அட்வைஸ் பண்றாரு ரிக்கி ரீட்...

ரெகுலர் பயணிகள் அவருக்கு வச்ச பேரு மிஸ்டர் பபுள் மேன்...

இவரோட வீடியோக்கள் டிக்டாக்ல செம்ம வைரல்.

சுற்றுலா வந்தவங்க கூட, “ஓ… நீங்கதானே அந்த பபுள் டிரைவர்?”னு அடையாளம் கண்டுபிடிக்குறளவு நம்ம ரிக்கி ஃபேமஸ்...

X

Thanthi TV
www.thanthitv.com