மலையேற்ற மாரத்தான் போட்டி - 24 மணி நேரத்தில் 100 முறை ஏறி சாதனை
மலையேற்ற மாரத்தான் போட்டி - 24 மணி நேரத்தில் 100 முறை ஏறி சாதனை
ஸ்லோவேனியாவில் நடந்த மலையேற்ற மாரத்தான் போட்டியில் 100 முறை சவாலான பாதைகளில் ஏறி ஜான்ஜா கார்ன்பிரெட் சாதனை படைத்தார் .
ஸ்லோவேனியா (SLOVENIA) நாட்டில் ஸ்லோவென்ஸ்கா பிஸ்ட்ரிகா (SLOVENSKA BISTRICA) என்ற இடத்தில் நடைபெற்ற 24 மணி நேர மலையேற்ற மாரத்தான் போட்டியில் ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற ஜான்ஜா கார்ன்பிரெட் கலந்து கொண்டார். இளம் மற்றும் பின்தங்கிய விளையாட்டு வீரர்களுக்கு நிதி திரட்டுவதற்காக நடத்தப்பட்ட இந்த மாரத்தானில் அவர் கலந்து கொண்டு, 24 மணி நேரத்தில் 100 முறை சவாலான பாதைகளில் ஏறி சாதனை படைத்தார். இந்த போட்டியில் மலையேற்றத்தில் ஆர்வம் கொண்ட நபர்கள் கலந்து கொண்டனர்.
ரக்பி உலக கோப்பை - களைகட்டும் லீக் போட்டிகள்
இங்கிலாந்து ரக்பி உலக கோப்பை போட்டியின் முதல் லீக் சுற்று முடிவில் ஆஸ்திரேலியா, கனடா, இத்தாலி, ஸ்காட்லாந்து அணிகள் வெற்றி பெற்றுள்ளது.
இங்கிலாந்து நாட்டில் மகளிர் ரக்பி உலக கோப்பை போட்டிகள் ஆகஸ்ட் 22 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. 4 குழுக்களாக பிரிக்கப்பட்டு 16 நாடுகள் இந்த போட்டியில் விளையாடி வருகின்றது. முதல் லீக் சுற்றில் சமோவா அணியை ஆஸ்திரேலியா அணி 73க்கு 0 என்ற கணக்கிலும், வேல்ஸ் அணியை ஸ்காட்லாந்து அணி 38-8 என்ற கணக்கிலும், பிஜி அணியை கனடா அணி 65-7 என்ற கணக்கிலும் , இத்தாலி அணியை பிரான்ஸ் அணி 24- 0 என்ற கணக்கிலும் வென்றது. இந்த போட்டிகள் செப்டம்பர் 27 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
எருது சவாரி போட்டி - பாலின பாகுபாடில்லாமல் பங்கேற்ற மக்கள்
ஜெர்மன் நாட்டின், ஹன்சோஃபென் பகுதியில் நடைபெற்ற எருது சவாரி பந்தயத்தை ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் நேரில் கண்டு ரசித்தனர். கிராம பகுதியில் நடைபெறும், கலாச்சார நிகழ்வான இந்த விழாவில், தங்களின் விவசாயத்திற்கு பயன்படும் எருதின் மீது, அமர்ந்து சவாரி செய்து, குறிப்பிட்ட எல்லை வரை செல்ல வேண்டும். வெற்றி பெற்றவர்களுக்கு இதில் பரிசும் வழங்கப்படுகிறது. இந்த விழாவில் ஆண்கள் மற்றும் பெண்கள் எந்த பாகுபாடும் இன்றி கலந்து கொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்துகின்றனர்.
வானை அலங்கரித்த வண்ண பட்டங்கள்
இலங்கை தலைநகர் கொழும்புவில் சர்வதேச காற்றாடி விழாவைக் காண ஆயிரக்கணக்கானோர் கூடினர். இந்த நிகழ்வில், நூற்றுக்கணக்கான பல வண்ணப் பட்டங்கள் வானை அலங்கரித்தன. இதனால் அந்த இடமே வண்ணமயமாக காட்சியளித்த நிலையில், அந்த வீடியோ காட்சிகள் வெளியாகியுநள்ளன.
SK நடிப்பில் "மதராஸி" - டிரெய்லர் வெளியீடு
