Modi | Trump | மொத்த உலகத்துக்கே சூனியம் வைத்த டிரம்ப் - இந்தியாவுக்கு தான் உச்சகட்ட பேரதிர்ச்சி

H-1B விசா கட்டணம் உயர்வு- டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்க அதிபர் டிரம்ப், H-1B விசா கட்டணத்தை 88 லட்சம் ரூபாயாக உயர்த்தி அறிவித்திருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டு தொழில்நுட்ப பணியாளர்களுக்கு வழங்கப்படும் H-1B விசா கட்டணம் உயர்த்தப்பட்டதால், வெளிநாட்டினரை அதிகளவில் வேலைக்கு அமர்த்தியுள்ள நிறுவனங்கள் கலக்கம் அடைந்துள்ளன. அமெரிக்க பணியாளர்களை தக்க வைக்கவும், குறைவான ஊதியத்தில் வெளிநாட்டு பணியாளர்களை நியமிப்பதை தடுப்பதற்காகவும் இந்த கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், வெளிநாட்டில் உள்ள தொழிலாளர்கள், 24 மணி நேரத்தில் அமெரிக்கா திரும்புமாறு அந்நாட்டு தொழில்நுட்ப நிறுவனங்கள் அழைப்பு விடுத்துள்ளன. கட்டண உயர்வு விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன் என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com