இங்கிலாந்தில் கேட்ட மோடி, மோடி.. கோஷம் - பார்த்து குஷியான பிரதமர்

x

இங்கிலாந்து சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

லண்டன் சென்றடைந்த இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இரு நாடுகளின்

உறவுகள் குறித்து இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மரை சந்தித்து மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார். மன்னர் 3-ம் சார்லசையும் அவர் சந்திக்கிறார். பிரதமர் மோடியின் இந்த பயணத்தில் இரு நாடுகள் இடையே சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் முறைப்படி இறுதி செய்யப்படும் என தெரிகிறது. இதுதவிர, பாதுகாப்பு. ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பம் போன்றவற்றிலும் இந்தியாவுடன் ஒப்பந்தம் ஏற்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக லண்டன் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அதிகாரிகளும், இந்திய வம்சாவளியினரும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்