

பிரதமர் மோடி- சீன அதிபர் வருகையை முன்னிட்டு மாமல்லபுரம் நகரம் விழாக்கோலம் கண்டு வருகிறது. சீன பிரதமர் ஜின்பிங் 3 நாள் பயணமாக அக்டோபர் 11 ஆம் தேதி இந்தியா வர உள்ளார். அவரது பயணத்தில் மாமல்லபுரம் புராதான சின்னங்களைச் சுற்றிப் பார்க்க உள்ளதால் அவருடன் இந்திய பிரதமர் மோடியும் மாமல்லபுரம் வருகை தர உள்ளார். இதையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், புராதன சின்னங்களை சீரமைக்கும் பணிகளை தொல்லியல் துறை தொடங்கியுள்ளது.