பேச்சுவார்த்தைக்கு பதிலாக ஏவுகணைகள் -ஜெலன்ஸ்கி ரஷ்யாவுக்கு கடும் பதில்
பேச்சுவார்த்தைக்கு பதிலாக ஏவுகணைகளை தேர்ந்தெடுக்கும் ரஷ்யா"
போரை முடிவுக்கு கொண்டு வரும் பேச்சுவார்த்தைக்கு பதிலாக ஏவுகணைகளை தேர்ந்தெடுக்கும் ரஷ்யாவிற்கு உலகம் அதற்கேற்ப பதில் அளிக்க வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தியுள்ளார். உக்ரைன் தலைநகரான கீவ் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் பலியானோரின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளதாகவும், இந்த தாக்குதலில் 53 பேர் காயமடைந்ததாகவும், இதுவரை எட்டு பேரின் நிலை குறித்து எந்த தகவலும் இல்லை என்றும் தமக்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை குறித்து தெரிவித்த அவர், ரஷ்யா மீது வலுவான பொருளாதார தடைகள், வலுவான அழுத்தங்கள் மற்றும் வலுவான நடவடிக்கைகள் தேவை என வலியுறுத்தியுள்ளார்.
Next Story
