Mike Tyson | ``இந்த உணவுகளை எடுத்துக்காதீங்க ப்ளீஸ்’’ - இரும்பு மனிதன் மைக் டைசனையே உடைத்த மரணம்

``இந்த உணவுகளை எடுத்துக்காதீங்க ப்ளீஸ்’’

உடல் பருமனால் தனது சகோதரியை இழந்தேன் என மைக் டைசன் உருக்கம் உடல் பருமனுக்கு எதிரான ஹீரோவாக இருக்க விரும்புவதாக அமெரிக்க முன்னாள் குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் தெரிவித்தார். அமெரிக்காவில் ஆரோக்கிய உணவுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், அதிகமாக பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொண்டதால் தனது வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டதாக கூறினார். உடல் பருமனால், தனது 25 வயதில் சகோதரியை இழந்ததாகவும் தெரிவித்தார். எனவே, அமெரிக்கர்கள் இயற்கையான, பதப்படுத்தப்படாத உணவுகளுக்குத் திரும்ப வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

X

Thanthi TV
www.thanthitv.com