"ஜோ பிடன் அதிபரானால் அமெரிக்கா பாதுகாப்பாக இருக்காது" - துணை அதிபர் மைக் பென்ஸ் விமர்சனம்

ஜோ பிடன் அதிபரானால் அமெரிக்கா பாதுகாப்பாக இருக்காது என்று அந்நாட்டு துணை அதிபர் மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார்.
"ஜோ பிடன் அதிபரானால் அமெரிக்கா பாதுகாப்பாக இருக்காது" - துணை அதிபர் மைக் பென்ஸ் விமர்சனம்
Published on

ஜோ பிடன் அதிபரானால் அமெரிக்கா பாதுகாப்பாக இருக்காது என்று அந்நாட்டு துணை அதிபர் மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார். பால்டிமோரில் குடியரசு கட்சி நிர்வாகிகள் இடையே பேசிய அவர் சட்டம் மற்றும் நீதியை நிலைநிறுத்தும் துறைகளுக்கு நிதியை குறைக்க போவதாக ஜோ பிடன் தெரிவித்ததை சுட்டி காட்டினார், ஒருவேளை அது நடந்து விட்டால் அமெரிக்காவில் வன்முறை தலைதூக்கும் என்று எச்சரித்தார். அமெரிக்க எல்லைகளை திறக்க வேண்டும், சட்டவிரோத குடியேறிகளுக்கு எல்லா வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும் என்பது ஜோ பிடனின் வாதம் என்றும் ஆனால் டிரம்ப் அமெரிக்க எல்லையை பலப்படுத்தி 300 கிலோ மீட்டர் நீளத்துக்கு எல்லை சுவர் எழுப்பியவர் என்றும் மைக் பென்ஸ் தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com