Mexico | Jet Crash | பயங்கர சத்தத்தோடு வெடித்த ஜெட்.. 6 பேர் பலியான சோகம்..
வட அமெரிக்க நாடான மெக்சிகோவின் டலுகா Toluca நகரில் தனியார் ஜெட் வெடித்து தீப்பற்றி எரிந்ததில், 6 பேர் உயிரிழந்தனர். இருவர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மெக்சிகோவின் அகாபல்கோ Acapulco நகரிலிருந்து டலுகா நோக்கி 6 பயணிகள் மற்றும் 2 விமான பணியாளர்களுடன் சென்ற அந்த ஜெட், திடீரென வெடித்து சிதறி கீழே விழுந்தது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
