

ஊரடங்கிற்கு எதிராக ஆஸ்திரேலியாவின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் போராட்டங்கலை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், விக்டோரியா மாநிலத்தில் காவல்துறையினரின் தடுப்புகளை மீறி போராட்டக்காரர்கள் நுழைய முயன்றனர். அவர்களைப் போலீசார் தடுத்து நிறுத்தியதால் இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கலவரம் வெடித்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.