``ஒருவேளை RCB போல SAவும்..’’ முடிவை கண்ணில் காட்டிய ஆட்டம்

x

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது.

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றுவரும் இந்தப் போட்டியில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 212 ரன்களும், தென் ஆப்பிரிக்கா 138 ரன்களும் எடுத்தன. 2வது இன்னிங்சில் ஆஸ்திரேலியா 207 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி, தென் ஆப்பிரிக்காவிற்கு 282 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. தொடர்ந்து 2வது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் ரிக்கல்டன் ( Rickelton) 6 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சற்று நேரம் தாக்குப்பிடித்த முல்டர் (Mulder) 27 ரன்கள் எடுத்தார். 3வது விக்கெட்டுக்கு மார்க்ரம் ( Markram) மற்றும் கேப்டன் டெம்பா பவுமா (Temba Bavuma) ஜோடி நிலைத்து நின்று ஆடியது. அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மார்க்ரம் சதம் விளாசினார். பவுமா அரைசதம் கடந்தார். 3ம் நாள் ஆட்ட முடிவில் தென் ஆப்பிரிக்கா 2 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்துள்ளது. மார்க்ரம் 102 ரன்களுடனும் பவுமா 65 ரன்களுடனும் களத்தில் உள்ள நிலையில் தென் ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு இன்னும் 69 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது. கைவசம் 8 விக்கெட்டுகள் இருப்பதால் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று தென் ஆப்பிரிக்கா வரலாறு படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்