செவ்வாய் கிரகம் எப்படி இருக்கும்?

ஸ்பெயின் நாட்டில் குகை ஒன்று, செவ்வாய் கிரக மாதிரி போன்று மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
செவ்வாய் கிரகம் எப்படி இருக்கும்?
Published on

ஸ்பெயின் நாட்டில் குகை ஒன்று, செவ்வாய் கிரக மாதிரி போன்று மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அர்டோன்டோ என்ற பகுதியில், 60 மீட்டர் உயரத்தில் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் இந்த குகை அமைந்துள்ளது. த்ரில்லான செவ்வாய் கிரக அனுபவத்தை கொடுப்பதற்காக, விஞ்ஞானிகள், கட்டட கலைஞர்கள் உள்ளிட்டோர், இந்த குகையை செவ்வாய் கிரகம் போன்று மாற்றி அமைத்துள்ளனர். இந்த பயணத்திற்காக ஒருவருக்கு, 4 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 4 நாட்கள், 3 இரவுகள் குகைக்குள் தங்கி, விண்வெளியில் நடப்பது, உணவு தயாரிப்பது உள்ளிட்ட அனுபவங்களை பெறலாம். செவ்வாய் கிரக மாதிரி பயணத்திற்கு முன்பாக பங்கேற்பாளர்களுக்கு 26 நாள் பயிற்சி அளிக்கப்படுகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com