கடலுக்கு அடியில் காதலை கூறிய நபர்...நீரில் மூழ்கி பலியான சோகம்...

கிழக்கு ஆப்பிரிக்காவின் பெம்பா தீவில், கடலுக்கு அடியில் காதலை கூறிய நபர், நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலுக்கு அடியில் காதலை கூறிய நபர்...நீரில் மூழ்கி பலியான சோகம்...
Published on
கிழக்கு ஆப்பிரிக்காவின் பெம்பா தீவில், கடலுக்கு அடியில் காதலை கூறிய நபர், நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. லூசியானாவை சேர்ந்த ஸ்டீவன் வெபர், தனது காதலி கெனிஷா ஆன்டோயினி-யுடன் கடலில் நீருக்கு அடியில் இருக்கும் விடுதியில் தங்கியுள்ளனர். அப்போது அங்கு நீருக்குள் இறங்கிய ஸ்டீவன், தன்னை திருமணம் செய்து கொள்ள முடியுமா என்பதை காதல் கடிதம் மற்றும் திருமண மோதிரத்துடன் கண்ணாடி வழியாக காதலியிடம் கேட்டுள்ளார். அப்போது சற்றும் எதிர்பாராதவிதமாக ஸ்டீவன் தண்ணீரில் மூழ்கியுள்ளார். அவரை காப்பாற்ற முயன்றும், பலனின்றி ஸ்டீவன் மூச்சு திணறி உயிரிழந்தார். இது அனைவரிடையேயும் சோகத்தை ஏற்படுத்தியது.
X

Thanthi TV
www.thanthitv.com