1956 ஆம் ஆண்டில் ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்த போது, அப்போதைய சீன அதிபர் சூ யென் லாய் உடன் மாமல்லபுரம் வருகை தந்துள்ளார்.அதன் பிறகு 1976 ஆம் ஆண்டில் இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது மாமல்லபுரம் வருகை தந்ததுடன், 3 நாட்கள் தங்கி அங்குள்ள கிராமங்களுக்கு சென்று மக்களைச் சந்தித்துள்ளார் .நேரு மாமல்லபுரம் வந்தபோதும், அதன்பின்னர் இந்திரா காந்தி வந்தபோதும் அவர்களை பார்த்ததாக சொல்கிறார் அங்கு வசிக்கும் 75 வயது முதியவர் சீனிவாசன்.நேரு, இந்திராவை அடுத்து பிரதமராக பதவியில் இருக்கும் போது மாமல்லபுரம் வருகை தரும் 3 வது பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றுள்ளார்.மாமல்லபுரம் வரும் 3 வது பிரதமரையும் சந்திக்க வாய்ப்பு கிடைக்குமா? என எதிர்பார்க்கும் முதியவர் சீனிவாசனின் ஆசை நிறைவேறுமா