மண்ணுக்குள் புதைந்த 48 பெண்கள் - ஊருக்குள் கேட்கும் மரண ஓலம்.. மேலும் 10 பேர் நிலை?
மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில், தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 48 பெண்கள் உயிரிழந்துள்ளனர். கெனிபா (Kenieba ) நகரத்திற்கு அருகில் உள்ள பிலால்கோடோ (Bilalkoto) கிராமத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த தங்கச் சுரங்கத்தில் விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏராளமான பெண்கள் தங்கத்தை அலசிக்கொண்டிருந்த போது, மண் அள்ளும் இயந்திரம் விழுந்ததால் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதில், 48 பெண்கள் சிக்கி உயிரிழந்த நிலையில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
Next Story
