அமெரிக்கா, சீனா உறவில் முக்கிய மாற்றம் - இந்தியாவுக்கு ஜாக்பாட் செய்தி சொன்ன டிரம்ப்

x

அமெரிக்கா, சீனா உறவில் முக்கிய மாற்றம் - இந்தியாவுக்கு ஜாக்பாட் செய்தி சொன்ன டிரம்ப்

அமெரிக்கா - சீனா இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து

சீனாவுடன் அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக, அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். சீனாவுடன் மிகச்சிறந்த ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக தெரிவித்த டிரம்ப், எல்லோருடனும் ஒப்பந்தங்களைச் செய்யப் போவதில்லை என்றும் குறிப்பிட்டார். ஒருவேளை இந்தியாவுடன் மிகப்பெரிய வர்த்தகம் மேற்கொள்ளப்படலாம் என்று தெரிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், ஒவ்வொரு நாட்டுடனும் உறவு மிகவும் சிறப்பாக உள்ளதாக குறிப்பிட்டார். அமெரிக்கா-சீனா ஒப்பந்தம் மூலம், இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தகப் போர் முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்