

விடுதலைப் புலிகளின் விமான தாக்குதல்களை ஒட்டுமொத்த உலக நாடுகளும், வியந்து பார்த்ததாக இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். திருகோணமலை சீனத்துறைமுகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய அவர், உலக நாடுகளுக்கு தற்கொலை அங்கி மற்றும் தற்கொலைத் தாக்குதலை நடத்தும் படகு போன்றவற்றை அறிமுகப்படுத்தியவர் பிரபாகரன் என தெரிவித்தார்.
உலகில் எந்த ஒரு தீவிரவாத அமைப்பாலும் விமானப்படை தாக்குதல்களை மேற்கொள்ள முடியாத நிலையில், விடுதலைப் புலிகளுக்கு மட்டுமே விமானப்படைத் தாக்குதல்களை நடத்துவதற்கான திறன் இருந்தது என்றும் அவர் கூறினார்.