இலங்கையில் 30 ஆண்டுகால போரை நிறைவுக்கு கொண்டு வந்த ராணுவத்தினரின் தியாகத்தை காட்டிக் கொடுக்கப் போவதில்லை என அந்நாட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார். இலங்கை போர் நிறைவு பெற்றதன் 12ம் ஆண்டு நினைவுநாளில் நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரையில், வெற்றிக்குக் காரணமான ராணுவத்தை பாதுகாக்கவே, ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் இருந்து வெளியேறியதாக தெரிவித்தார். மேலும், எத்தனை சவால்கள் வந்தாலும் சர்வதேச அரங்கில் ராணுவத்தினரின் தியாகத்தை காட்டிக் கொடுக்கப் போவதில்லை எனவும் அவர் உறுதிபட தெரிவித்துள்ளார்.