வீட்டில் தங்க ஆபரணங்களை புதைத்த விடுதலைப்புலிகள்? நீதிமன்ற உத்தரவின்பேரில் தோண்டும் பணி தொடக்கம்

வீட்டில் தங்க ஆபரணங்களை புதைத்த விடுதலைப்புலிகள்? நீதிமன்ற உத்தரவின்பேரில் தோண்டும் பணி தொடக்கம்
Published on

விடுதலைப்புலிகள் அமைப்பினர் தங்க ஆபரணங்களை புதைத்து வைத்ததாக கருதப்படும் வீட்டை தோண்டும் பணி தொடங்கி உள்ளது. இலங்கை ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்த போரின்போது, கிளிநொச்சி அடுத்த தர்மபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில், விடுதலைப்புலிகள் அமைப்பினர் தங்க ஆபரணங்களை புதைத்து வைத்ததாக தகவல் வெளியானது. இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின்பேரில், போலீஸ் பாதுகாப்போடு அந்த வீட்டை தோண்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. முழுவதும் தோண்டிய பின்னர் தான் ஆபரணங்கள் புதைக்கப்பட்டதா என்பது தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com