இங்கிலாந்தில் விடுதலை புலிகள் மீதான தடை நீக்கம்

இங்கிலாந்தில் விடுதலை புலிகள் மீதான தடை விரைவில் நீங்குகிறது.
இங்கிலாந்தில் விடுதலை புலிகள் மீதான தடை நீக்கம்
Published on

இங்கிலாந்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், புலிகள் மீதான தடைக்கு எதிராக மேல்முறையீட்டு வழக்கை தொடர்ந்தது. இங்கிலாந்தில் தடை செய்யப்பட்ட அமைப்புகள் தொடர்பான சிறப்பு ஆணையத்தில் இந்த மேல்முறையீட்டு வழக்கு தொடரப்பட்டது.

வழக்கு விசாரணையில், புலிகள் இயக்கம் தற்போது பயங்கரவாதத்தில் தொடர்புடையவர்கள் என நம்புவதற்கான நியாயமான காரணங்கள் இல்லை என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் சார்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து புலிகள் மீதான தடை தவறு என சிறப்பு ஆணையம் தீர்ப்பளித்துள்ளது.

38 பக்கங்கள் கொண்ட தீர்ப்பின் அடிப்படையில் இங்கிலாந்தில் விடுதலை புலிகளுக்கு எதிரான தடை விரைவில் நீங்கும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com