புதிய போப் ஆக இன்று பதவியேற்கிறார் 14ம் லியோ - விழாக்கோலம் பூண்ட வாடிகன்
புதிய போப் பதவியேற்பு விழா இன்று நடைபெறுகிறது. கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருந்த போப் பிரான்சிஸ் மறைவை தொடர்ந்து புதிய போப்பாக போப் லியோ அண்மையில் தேர்வு செய்யப்பட்டார். கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக பதவி ஏற்கும் நிலையில், வாடிகன் நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.
இந்நிகழ்வில் உலக நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்கின்றனர். இந்தியா சார்பில் மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் மற்றும் நாகாலாந்து துணை முதல்வர் யாதுங்கோ பட்டொன் பங்கேற்கின்றனர்.
Next Story
