லண்டன் உயிரியல் பூங்காவில் உள்ள ஆயிரக்கணக்கான விலங்குகளின் உடல் எடை மற்றும் உயரத்தை அளக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். விலங்குகளின் ஆரோக்கியத்தை உறுதி செய்யும் வகையில் ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த பணியை மேற்கொள்ள பல மணி நேரம் செலவிடப்படுகிறது. குறிப்பாக குரங்குகளின் எடையை அளக்க பெரிய போராட்டமே நடைப்பதாக பூங்கா ஊழியர்கள் கூறுகின்றனர். பூங்காவில் இருக்கும் ஒட்டகச் சிவிங்கியின் எடை 836 கிலோ என்றும் சுமத்திரன் புலியின் எடை 135 கிலோ என்று கணக்கிடப்பட்டுள்ளது.