மார்ச் 1ல் ஏலத்திற்கு வரும் 1896ம் ஆண்டு ஒலிம்பிக் பதக்கம்
மார்ச் 1ல் ஏலத்திற்கு வரும் 1896ம் ஆண்டு ஒலிம்பிக் பதக்கம்
1896ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வழங்கப்பட்ட ஒரு வெள்ளிப் பதக்கம் டென்மார்க் நாட்டில் ஏலத்திற்கு வர உள்ளது
நவீன ஒலிம்பிக் போட்டிகளின் முதல் பதிப்பான அந்த ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் வெற்றி பெற்றவர்களுக்கு வெள்ளிப் பதக்கமும், 2ம் இடம் பெற்றவர்களுக்கு வெண்கலப் பதக்கமும் வழங்கப்பட்டன. மொத்தம் 43 போட்டிகளில் வீரர்கள் பதக்கங்கள் பெற்றனர்.
இந்த அபூர்வ பதக்கத்திற்கான ஆன்லைன் ஏலம் மார்ச் 1ஆம் தேதி நடைபெறவுள்ளது..
இது 43 லட்ச ரூபாய் வரை ஏலம் போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது..
1896 ஒலிம்பிக்கில் எடை தூக்குதல் பிரிவில் ஒரே ஒரு டென்மார்க் வீரர் பங்கேற்றிருந்தாலும், தற்போது ஏலத்திற்கு வரும் இந்த பதக்கம் எந்த வீரருக்குச் சொந்தமானது என்பது தெரியவில்லை. இத்தாலியில் நடைபெற்று வரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளால், இந்த பதக்கம் கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது.
