Kim Jong Un | கிம்முக்காக காத்திருந்த அரங்கம்.. என்ட்ரி கொடுத்ததும் வீராங்கனைகள் கொடுத்த ரியாக்‌ஷன்

x

வடகொரியாவில் அரசியலமைப்பு தினம் கொண்டாடப்பட்டது. இதில் அதிபர் கிம் ஜாங் உன் பங்கேற்றார்.

வடகொரியாவில் சோசலிச அரசியலமைப்பு கடந்த 1972ம் ஆண்டு டிசம்பர் 27ம் தேதியன்று ஏற்கப்பட்டது. இதையொட்டி பியாங்யாங்கில் உள்ள அரங்கில் நடைபெற்ற விழாவில், வட கொரியாவின் இறையாண்மை மற்றும் அந்நாட்டு மக்களின் நலன்களை பாதுகாக்க அதிபர் கிம் உறுதிமொழி ஏற்றார்.

இவ்விழாவில், அதிபர் கிம்மின் சகோதரி கிம் யோ ஜாங் மற்றும் வட கொரிய வெளியுறவு அமைச்சர் சோ சன்-ஹுய் ஆகியோர் கலந்து கொண்டனர்.

17 வயதுக்கு உட்பட்ட கால்பந்து போட்டியில், மகளிர் உலகக் கோப்பை வென்ற வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்கள் அதிபர் கிம்மை வரவேற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்