கேரளாவிற்கு நிவாரண நிதியாக ரூ.700 கோடியா?

கேரளாவிற்கு ஐக்கிய அரபு அமீரகம் 700 கோடி ரூபாய் வெள்ள நிவாரண நிதி வழங்குவதாக வெளியான தகவலில் குழப்பம் நிலவுகிறது.
கேரளாவிற்கு நிவாரண நிதியாக ரூ.700 கோடியா?
Published on

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் 700 கோடி ரூபாய் நிதி உதவி அளிக்கப்படுவதாகவும், அதற்கு நன்றி தெரிவிப்பதாகவும் கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் தமது சமூக வளைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில், நிவாரண நிதி வழங்குவது தொடர்பாக கேரள அரசுடன் தங்கள் நாடு பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அது தொடர்பான விவரங்கள் தங்களுக்கு தெரியவில்லை என்றும் டெல்லியில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.கேரளா வெள்ள நிவாரண நிதியாகதங்கள் நாட்டு மக்களிடம் நிதி வசூலிக்கப்பட்டு வருவதாகவும், அது நிறைவு பெற்ற பின்னரே கேரள அரசிற்கு எவ்வளவு நிதி உதவி வழங்குவது என்பது முடிவு செய்யப்படும் என்றும் தூதரக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com