ஏமனில் கேரள நர்ஸ்-க்கு 7 நாளில் தூக்கு - என்ன செய்ய போகிறது இந்தியா?
ஏமன் நாட்டு குடிமகனை கொன்ற வழக்கில் கேரளாவை சேர்ந்த செவிலியருக்கு வரும் 16 ம் தேதி மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2011-ஆம் ஆண்டு கேரளாவின் பாலக்காட்டிலிருந்து ஏமன் நாட்டிற்கு பணிக்காக சென்றார் செவிலியர் நிமிஷா பிரியா. உள்நாட்டு கலவரம் காரணமாக தாயகம் திரும்பமுடியாமலிருந்த அவர், ஏமனை சேர்ந்த தலால் அப்தோ மஹ்தியுடன் சேர்ந்து அங்கு கிளினிக் ஒன்றை ஆரம்பித்து நடத்தி வந்தார். இந்நிலையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையால், நிமிஷா பிரியா கைது செய்யப்பட்டார். பிறகு விடுதலையான அவர் தாயகம் திரும்ப நினைத்தார். ஆனால் அவரது பாஸ்போர்ட் அப்தோ மஹ்தியிடம் இருந்ததால் அவருக்கு மயக்க மருந்து கொடுத்து அதை எடுக்க முயன்றுள்ளார். ஓவர்டோஸ் ஆனதால் அப்தோ மஹ்தி உயிரிழந்தார். இந்த குற்றத்திற்காக 2017 முதல் சிறையிலிருந்த நிமிஷா பிரியாவுக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
