கேன்ஸ் விழா - மிஷன் இம்பாசிபிள் படத்திற்கு 5 நிமிடம் கைத்தட்டல்
கேன்ஸ் திரைப்பட விழாவில், மிஷன் இம்பாசிபிள் திரைப்படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.ஃபிரான்சில், 78வது கேன்ஸ் திரைப்பட விழா வரும் 24-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில், உலகம் முழுவதிலும் இருந்து திரைத்துறை பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர். பிரபல நடிகர் டாம் குரூஸ் Tom Cruise நடிப்பில் மிஷன் இம்பாசிபிள் தி ஃபைனல் ரெக்கனிங் Mission: Impossible--The Final Reckoning
படம் திரையிடப்பட்டது. சிறப்பு விருந்தினர்களாக டாம் குரூஸ் உள்ளிட்டோர் பங்கேற்ற நிலையில், இப்படத்தை பார்த்தவர்கள், கிட்டத்தட்ட 5 நிமிடங்கள் கைத்தட்டி தங்கள் பாராட்டுதல்களை தெரிவித்தனர். இதற்காக டாம் குரூஸ் நன்றி தெரிவித்துக்கொண்டார்.மிஷன் இம்பாசிபிள் தி ஃபைனல் ரெக்கனிங் படம்வரும் 17ம் தேதி இந்தியாவில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
