திட்டியதால் அப்பாவை போலீசில் சிக்க வைத்த சில்வண்டு - `கசகசா' வைத்திருந்ததால் அதிரடி கைது
சீனாவின் யாக்நிங் சிட்டியில் வீட்டுப்பாடம் செய்யவில்லை என்பதை தந்தை கண்டித்ததால் வீட்டில் சட்டவிரோத பொருள் இருப்பதாக சிறுவன் அளித்த தகவலால் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். வீட்டு பாடம் செய்யவில்லை என்று தந்தை கண்டித்ததால் கோபித்து கொண்டு வெளியில் சென்ற சிறுவன் அருகில் இருந்த கடைக்காரர் ஒருவரிடம் செல்போனை வாங்கி காவல்துறைக்கு தனது தந்தை குறித்து புகார் அளித்துள்ளார்.அதன்படி போலீசார் சிறுவனின் வீட்டில் சோதனை செய்ததில் சீன அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட உணவு பொருட்களில் ஒன்றான கசகசா விதைகளை மறைத்து வைத்திருந்தது தெரியவரவே அவரை கைது செய்து அழைத்து சென்றனர்.
Next Story
