Sunita Williams | ``1 நூல் தான்.. சுனிதா வெடித்து சிதறி இறந்திருப்பார்’’ - நடுங்கவிட்ட ரிப்போர்ட்

``1 நூல் தான்.. சுனிதா வெடித்து சிதறி இறந்திருப்பார்’’

``1 நூல் தான்.. சுனிதா வெடித்து சிதறி இறந்திருப்பார்’’ - `நாசா’ ரகசியம் உடைந்தது.. உலகை குலைநடுங்க விட்ட 311 பக்க ரிப்போர்ட் #sunitawilliams #nasa சுனிதா வில்லியம்ஸ் உயிர் ஆபத்தில் இருந்ததை ஒப்புக்கொண்ட நாசா போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனரில் சர்வதேச விண்வெளி நிலையம் சென்று சிக்கிய சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட இருவர் கல்பனா சாவ்லா உயிரிழக்க காரணமான கொலம்பியா விண்கல விபத்தைப் போன்றதொரு அபாயத்தில் சிக்கி இருந்ததாக நாசா வெளியிட்டிருக்கும் தகவல் பகீர் கிளப்பியுள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூன் 5 ஆம் தேதி நாசா விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் வெறும் 8 நாள் பயணமாக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றனர். ஆனால், போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, சுமார் 9 மாதங்கள் அங்கேயே சிக்கித்தவித்தனர். அவர்களை அழைத்துச் சென்ற ஸ்டார்லைனரிலேயே திரும்ப பூமிக்கு அழைத்து வருவது சாத்தியம் என்றாலும், முன்னெச்சரிக்கையாக, ஆட்களின்றி ஸ்டார்லைனர் விண்கலம் மட்டும் பூமிக்கு கொண்டுவரப்பட்டது. நீண்ட இழுபறிக்குப் பிறகு, கடந்தாண்டு செப்டம்பர் மாதம் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் அனுப்பப்பட்டு, இருவரும் பத்திரமாக பூமிக்கு திருப்பி அழைத்து வரப்பட்டனர். ஆனாலும், சுனிதா வில்லியம்ஸ் சென்ற போயிங்கின் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு பற்றி நாசா மவுனம் காத்து வந்தது. இந்த நிலையில், ஸ்டார்லைனரில் ஏற்பட்ட கோளாறு டைப் ஏ வகை விபத்துக்கு வழிவகுத்திருக்கும் எனக் குறிப்பிட்டு, 311 பக்க அறிக்கையை நாசா நிர்வாகி ஜாரெட் ஐசக்மேன் (Jared Isaacman) வெளியிட்டுள்ளார். விண்கலம் தனது முழு கட்டுப்பாட்டையும் இழப்பதையே டைப் ஏ வகை விபத்து குறிக்கும். அப்படி ஒரு சூழலே ஸ்டார்லைனருக்கு ஏற்பட்டதாகவும், போயிங் நிறுவன அதிகாரிகள் பாதுகாப்பு நடவடிக்கைகளை அலட்சியப்படுத்தியதாகவும், திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும் என்ற அழுத்தத்தினால் பாதுகாப்பு விதிகள் மீறப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஒருவேளை ஸ்டார்லைனர் விபத்தில் சிக்கி இருந்தால், அது கல்பனா சாவ்லாவை பலி கொண்டதைப் போன்ற பேரழிவை ஏற்படுத்தி இருக்கும் என்றும் அந்த அறிக்கை பகீர் கிளப்பியுள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனையான கல்பனா சாவ்லா உள்ளிட்ட 7 வீரர்கள், ஐ.எஸ்.எஸ்.-ல் இருந்து பூமிக்கு திரும்பிய போது, பூமியின் வளிமண்டலத்தில் நுழந்த உடனேயே கொலம்பியா விண்கலம் வெடித்து சிதறி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு டிசம்பர் 27 அன்று சுனிதா ஓய்வு பெற்றார். சுமார் 27 ஆண்டுகால பயணத்தில், சர்வதேச விண்வெளி நிலையத்தில் அதிக நாட்கள் தங்கியவர் என்ற பெருமையை பெற்ற சுனிதா, தனது கடைசி பயணத்தில் மயிரிழையில் உயிர் தப்பினார் என்ற உண்மையை நாசா இப்போது உடைத்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com