இந்த பாண்டாவுக்கு அமைஞ்ச வாழ்க்கைய பாருங்களே...
பாண்டா கரடிக்கு Birthday... கண்டுகளித்த சுற்றுலாப் பயணிகள்...
தென் அமெரிக்கா நாடான மெக்சிகோவில் உள்ள வன உயிரின பூங்காவில் பாண்டா கரடிக்கு உற்சாகமாகப் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. Xin Xin என பெயரிடப்பட்ட பாண்டா கரடி அங்கு பராமரிக்கப்படும் நிலையில், அதற்கு 35வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்டு இருந்த கேக்கை பாண்டா கரடி ருசித்து மகிழ்ந்தது.
பாண்டா கரடியின் பிறந்தநாள் விழாவை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கண்டுகளித்ததுடன், தாங்களும் கேக் சாப்பிட்டு உற்சாகம் அடைந்தனர். பிறந்தநாள் விழாவில் கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.
Next Story
