Joe Biden |Prostate Cancer - ஆண்களே குறி..? இந்த அறிகுறிகள் இருக்கா..? யாரையெல்லாம் தாக்கும்..?

x

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு தீவிரமான ப்ரோஸ்டேட் புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டிருக்கரது தெரியவந்திருக்கு. இது தொடர்பான செய்திகுறிப்ப பைடனோட அலுவலகம் வெளியிட்டிருக்கு. இந்த நிலையில பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உட்பட உலக தலைவர்கள் அனைவரும் பைடன் சீக்கரமா குணமடையனும்னு தெரிவிச்சிருக்காங்க. சரி இந்த ப்ரோஸ்டேட் கேன்சர்னா என்ன? அது யாருக்கு வர வாய்ப்பு இருக்கு? என்ன காரணங்களால இந்த வகை கேன்சர் உருவாகுது? இந்தியாவ பொறுத்த வரைக்கும் இந்த வகை கேன்சரோட நிலை என்ன இதுக்கான சிகிச்சை முறைகள் என்னன்னனு கொஞ்சம் விரிவா பார்க்கலாம்.

Card 1

மருத்துவ ஆய்விதழான லான்செட் போன வருஷம் ஒரு ஆய்வறிக்கைய வெளியிட்டிருந்தது. அதுல உலகளவுல இந்த ப்ரோஸ்டேட் கேன்சரால பாதிக்கப்படக்கூடிய ஆண்களோட எண்ணிக்கை அதிகரிச்சிருக்கரதா சொல்லப்பட்டுச்சு. குறிப்பா ஆண்கள அதிக அளவுல குறிவெக்கும் ஒரு வகை கேன்சரா தான் இது இருக்கு. அண்களோட இனப்பெருக்க அமைப்போட ஒரு பகுதி தான் ப்ரோஸ்டேட்னு அழைக்கப்படுது. உதாரணத்துக்கு ஒரு வால்நட்டோட அளவு தான் இந்த பகுதி இருக்கும்னு சொல்லப்படுது.

Card 2

ஆண்களுக்கு 45-50 வயசுக்கு அப்பரம் தான் பெரும்பாலும் இந்த வகை கேன்சர் ஏற்படும்னு சொன்னாலும் ப்ரோஸ்டேட் தொடர்பான பிரச்சினைகள் எல்லாமே கேன்சர் கிடையாதுன்னு மருத்துவர்கள் தரப்புல சொல்லப்படுது. குறிப்பா அந்த ப்ரோஸ்டேட் பகுதியோட அளவு அதிகரிக்க ஆரம்பிக்கும்போது தான் அறிகுறிகளும் தென்பட ஆரம்பிக்குமாம். மருத்துவர்களோட கூற்றுப்படி அடிக்கடி சிறிநீர் கழித்தல், சிறுநீர் கழிக்கும் போது வலி எற்படரது, சிறுநீர்ல ரத்தப்போக்கு இதுலாம் தான் முதற்கட்ட அறிகுறிகளா இருக்கு. இன்னொன்னு இந்த அறிகுறிகள்ளாம் இருந்தா உடனே அது கேன்சரா தான் இருக்கனும்னு எந்த அவசியமும் இல்லன்னு சொல்ர மருத்துவர்கள் முறையான பரிசோதனை தான் எதையுமே உறுதிபடுத்தும்னும் சொல்ராங்க.

Card 3

சரி இந்த வகை பாதிப்பு யார் யாருக்கெல்லாம் வருதுன்னு பார்த்தா, முதல்ல ஆண்கள், அதுலயும் வயது அதிகமான ஆண்கள் தான். குறிப்பா 50 வயதை தாண்டிய ஆண்கள் தான் அதிகம் பாதிக்கப்படரதாவும் இளம் வயது ஆண்கள் பாதிக்கப்படரது ஒப்பீட்டளவுல குறைவுன்னும் மருத்துவர்கள் சொல்ராங்க.

Card 4

பொதுவா எந்த வகை கேன்சர் ஆனாலும் அது உருவாக சில காரணிகள் இருக்கும். ஆண்களோட வயது அதிகரிக்கும்போது ப்ரோஸ்டேட் கேன்சர் ஏற்படுவதுக்கான சாத்தியக்கள் அதிகரிக்கரதா சொல்லப்படுது. குறிப்பா மேலை நாடுகள்ள வாழ்க்கைமுறை காரணமா இந்த வகை கேன்சர் அதிகமா காணப்படரதா சொல்லப்படுது. காரணம் புகை பிடித்தல் மது அருந்துதல் உணவு பழக்கம் இது எல்லோதோடையும் தொடர்பு இருப்பதா சொல்லப்பட்டாலும் மரபணு முக்கிய பங்கு வகிப்பதாவும் சொல்லப்படுது. அதாவது ஒரு குடும்பத்துல யாருக்காவது ப்ரோஸ்டேட் புற்றுநோய் இருந்திருந்தா அந்த குடும்பத்தோட ஆண்கள் குறிப்பா 45 வயதை தாண்டியவர்கள் பரிசோத்னை செஞ்சிக்குரது நல்லதுன்னு மருத்துவர்கள் அறிவுறுத்தராங்க.


Next Story

மேலும் செய்திகள்