ஜில் பைடனின் கொள்கை இயக்குநராக இந்திய அமெரிக்கர் நியமனம்

அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள ஜோ பைடனின், மனைவி ஜில் பைடனின் கொள்கை இயக்குநராக இந்திய-அமெரிக்கரான மாலா அடிகா நியமித்து ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.
ஜில் பைடனின் கொள்கை இயக்குநராக இந்திய அமெரிக்கர் நியமனம்
Published on
அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள ஜோ பைடனின், மனைவி ஜில் பைடனின் கொள்கை இயக்குநராக இந்திய-அமெரிக்கரான மாலா அடிகா நியமித்து ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக ஜில் பைடனின் ஆலோசகராகவும், தேர்தலின் போது ஜோ பைடன், கமலா ஹாரிசுக்கு மூத்த கொள்கை ஆலோசகராகவும் பணியாற்றியவர் மாலா அடிகா. இதுதவிர ஜோபைடனுக்கு குடும்பத்துக்கு சொந்தமான உயர்கல்வி மற்றும் ராணுவ குடும்பத்தினர் தொடர்புடைய அமைப்பின் இயக்குநராகவும் மாலா அடிகா பணியாற்றி வந்துள்ளார். ஓபாமா ஆட்சிக் காலத்திலும் சில பதவிகளை வகித்த மாலா அடிகா, இல்லினாய்ஸ் மாகாணத்தை சேர்ந்த மாலா அடிகா சட்டம் பயின்றவர். ஓபாமாவுக்காக பிரச்சாரத்தில் ஈடுபடும் வரை 2008 வரை வழக்கறிஞர் குழுமத்தில் பணியாற்றி வந்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com